தீங்கு விளைவிக்க எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் மஸ்க்: ஓபன் ஏஐ சிஇஓ பகீர்
தீங்கு விளைவிக்க எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் மஸ்க்: ஓபன் ஏஐ சிஇஓ பகீர்
UPDATED : ஆக 13, 2025 03:47 PM
ADDED : ஆக 13, 2025 09:45 AM

வாஷிங்டன்: ''எலான் மஸ்க் தனது சொந்த நலனுக்காகவும், தனது போட்டியாளர்களுக்கு தீங்கு விளைவிக்கவும் எக்ஸ் தளத்தை பயன்படுத்துகிறார்'' என ஓபன் ஏஐ நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன் குற்றம் சாட்டி உள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், எக்ஸ் சமூக வலைதளத்தை நடத்தி வருகிறார். இவருக்கும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேனுக்கும் மோதல் வெடித்துள்ளது.
மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 'ஓபன் ஏஐ'க்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டு மற்ற ஏஐ நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுகின்றன; இதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்து, 'ஓபன் ஏஐ' சிஇஓ சாம் ஆல்ட்மேன் கூறியதாவது: மஸ்க் தனது சொந்த நலனுக்காகவும், தனது போட்டியாளர்களுக்கு தீங்கு விளைவிக்கவும் எக்ஸ் தளத்தை பயன்படுத்துகிறார்.
ஆப்பிள் ஆப் ஸ்டோரில் எக்ஸ் சமூக வலைதளம் உலகின் நம்பர் 1 செயலியாகவும், Grok அனைத்து செயலிகளிலும் 5வது இடத்தில் இருக்கும் போது, நீங்கள் அரசியல் விளையாடுகிறீர்களா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.