சாலையில் சிறுநீர் கழித்தவரை தட்டிக் கேட்டவர் சுட்டுக்கொலை
சாலையில் சிறுநீர் கழித்தவரை தட்டிக் கேட்டவர் சுட்டுக்கொலை
ADDED : செப் 09, 2025 06:59 AM

கலிபோர்னியா; அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தான் வேலை பார்த்த கடை முன் சிறுநீர் கழித்த நபரை தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட மோதலில், இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள பராக்கலான் கிராமத்தைச் சேர்ந்தவர் கபில், 26. இவரது தந்தை விவசாயி.
கபிலுக்கு பெற்றோர் மற்றும் இரு சகோதரிகள் உள்ளனர். இந்நிலையில் கபில், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்துக்கு கடந்த மூன்று ஆண்டுக்கு முன் ' டாங்கி ரூட்' எனப்படும் சட்டவிரோத வழியில் சென்றார்.
பனாமாவில் உள்ள காடுகள் வழியே சென்று மெக்சிகோ நாட்டின் சுவரைத் தாண்டி சென்ற அவரை, அமெரிக்கா பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின் விடுதலை செய்யப்பட்டார்.
சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல அவருக்கு 45 லட்சம் ரூபாய் செலவானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள க டையில் கபில் காவலாளியாக பணியாற்றினார். அங்கு வந்த நபர் கடை அருகே சாலையில் சிறுநீர் கழித்துள்ளார். இதை தட்டி கேட்ட கபிலை அந்த நபர் துப்பாக்கியால் சுட்டார்.
இ தில் சம்பவ இடத்திலேயே கபில் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த கபில் உடலை தாயகத்துக்கு கொண்டு வர ஹரியானா மற்றும் மத்திய அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.