தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/உலகம்/ காங்கோவில் ஐ.எஸ்., தாக்குதல்; 25 பேர் பலி

 காங்கோவில் ஐ.எஸ்., தாக்குதல்; 25 பேர் பலி

 காங்கோவில் ஐ.எஸ்., தாக்குதல்; 25 பேர் பலி


ADDED : ஜன 27, 2026 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 01:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கின்ஷாசா: மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் கிழக்குப்பகுதி கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஐ.எஸ்., தொடர்புடைய ஏ.டி.எப்., எனப்படும் அல்லைட் டெமாக்ராடிக் போர்ஸ் மற்றும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிக்குழு உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து அப்பாவி மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இடுரி மாகாணம் அபகுலு கிராமத்தில், ஏ.டி.எப்., ஆயுதக்குழு நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், 15 ஆண்கள் ஒரு வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us