எட்டு புதிய துாதரக மையங்களை அமெரிக்காவில் திறந்தது இந்தியா
எட்டு புதிய துாதரக மையங்களை அமெரிக்காவில் திறந்தது இந்தியா
ADDED : ஆக 03, 2025 02:17 AM
நியூயார்க்:அமெரிக்காவில், இந்தியர் களுக்காக எட்டு புதிய துாதரக மையங்களை இந்தியா திறந்துள்ளது.
அமெரிக்காவில், 50 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு முன்னுரிமை அளித்து, பல்வேறு வசதிகளையும், உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவில் விசா, பாஸ்போர்ட் மற்றும் பிற சேவைகளுக்கான வசதிகளை விரிவுபடுத்தி, அங்குள்ள இந்தியர்கள், எளிதில் அணுகக்கூடிய வகையில் துாதரக மையங்களை அதிகரித்துள்ளது.
பாஸ்டன், கொலம்பஸ், டல்லாஸ், டெட்ராய்ட், எடிசன், ஆர்லா ண்டோ, ராலே மற்றும் சான் ஜோஸ் ஆகிய இடங்களில் புதிய இந்திய துாதரக விண்ணப்ப மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுக்கான இந்தியத் துாதர் வினய் குவாத்ரா, அவற்றை ' வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.
இதன் வாயிலாக, அமெரிக்காவில் உள்ள இந்திய துாதரக விண்ணப்ப மையங்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளன.