ADDED : ஜன 01, 2026 12:42 AM

பீஜிங்:: 'குவாட்' நாடுகளின் துாதர்கள் சீன: தலைநகர் பீஜிங்கில் உள்ள அமெரிக்க துாதரகத்தில் சந்தித்து பேசினர்.: அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்காவின் சமீபத்திய வர்த்தக வரிகள் காரணமாக, இந்த அமைப்பின் கூட்டங்கள் நடைபெறவில்லை.
இந்நிலையில், சீனாவுக்கான இந்நாடுகளின் துாதர்கள், சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள அமெரிக்க துாதரகத்தில் நேற்று சந்தித்தனர். வழக்கமாக இது போன்ற சந்திப்புகள் குறித்து வெளிப்படையான அறிக்கை எதுவும் வெளியிடப்படாது. ஆனால், சீனாவுக்கான அமெரிக்க துாதர் டேவிட் பெர்டியூ, சமூக வலைதள பக்கத்தில், இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'இந்தோ - பசிபிக் பகுதியை சுதந்திரமாக வைத்திருக்க குவாட் செயல்பாடு உதவும். நான்கு நாடுகளின் உறவு தொடர்ந்து உறுதியாகவும், வலுவாகவும் உள்ளது' என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

