sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி நடக்கும் தீவு மீது தாக்குதல்

/

 ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி நடக்கும் தீவு மீது தாக்குதல்

 ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி நடக்கும் தீவு மீது தாக்குதல்

 ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி நடக்கும் தீவு மீது தாக்குதல்


ADDED : மார் 15, 2026 01:24 AM

Google News

ADDED : மார் 15, 2026 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: ஈரானின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்று மதியில், 90 சதவீதம் நடக்கும் கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது.

மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் 15வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

ஈரா ன் சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தை முடக்கியுள்ள நிலையில், அவர்களுக்கு அவர்கள் பாணியில் பதிலடி கொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஈரா னின் புஷேர் மாகாண கடற்கரையிலிருந்து 28 கி.மீ., துாரத்தில் பாரசீக வளைகுடாவில் கார்க் தீவு அமைந்துள்ளது. மொத்தம் 40 சதுர கி.மீ., பரப்பு கொ ண்ட சிறிய தீவு இது.

இந்த தீவு, எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், ஏற்றுமதி முனையங்கள் மற்றும் எண்ணெய் வினியோக குழாய்களால் நிரம்பியுள்ளது.

கடல்சார் எண்ணெய் களங்களில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய், குழாய்கள் வழியாக இந்த தீவுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து உலக சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.

ஆண்டுக்கு 95 கோடி பேரல் கச்சா எண்ணெய் இந்த மையம் வழியாக கையாளப்படுகிறது. ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியின், 90 சதவீதம் இங்கு தான் நடக்கிறது.

இந்நிலையில், அமெரிக்க வி மான படை, இந்தத் தீவு மீது நேற்று தாக்குதல் நடத்தியதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “கார்க் தீவில் உள்ள ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தினோம்.

''ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்களின் பயணத்தை தடுக்கும் நடவடிக்கையை ஈரான் மேற்கொண்டால், தீவின் எண்ணெய் உட்கட்டமைப்புகளையும் தாக்குவோம்,” என்றார்.

சாம்பலாக்குவோம்!

அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டல் குறித்து ஈரான் ராணுவம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பை அமெரிக்கா தாக்கினால், இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் தொடர்புடைய எண்ணெய் மற்றும் எரிசக்தி நிறுவனங்கள் சாம்பலாக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us