அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி; 5 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி; 5 பேர் காயம்
ADDED : செப் 22, 2025 10:40 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் வடமேற்கு இண்டியானா மாகாணத்தில் ஒரு பிரபல ஷாப்பிங் மால் உள்ளது. இந்த ஷாப்பில் மாலில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மர்மநபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 2 பேர் பலத்த காயமுற்று உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக புலனாய்வாளர்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். இந்த வழக்கில் குற்றவாளியைக் கைது செய்ய உதவியாக தகவல் அளிப்பவர்களுக்கு ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.