ஜப்பான் தொழிற்சாலையில் கத்திக்குத்து: 14 பேர் காயம்
ஜப்பான் தொழிற்சாலையில் கத்திக்குத்து: 14 பேர் காயம்
ADDED : டிச 26, 2025 04:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டோக்கியோ: ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள மிஷிமா பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜப்பானின் மத்திய பகுதியில் மிஷிமா என்ற பகுதியில் ரப்பர் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கத்தியுடன் வந்த ஒருவர், தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களை சராமரியாக தாக்கத் துவங்கினார். மேலும் ரசாயனம் ஒன்றையும் வீசியுள்ளார்.
இந்த சம்பவத்தில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், கத்திக்குத்து நடத்திய நபரையும் பிடித்து கொடுத்தனர். காயமடைந்தவர்களின் நிலைமை, தாக்குதல் நடத்திய நபர் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

