நைஜீரியா பயங்கரவாதிகள் கடத்திய 130 மாணவர்கள் மீட்பு
நைஜீரியா பயங்கரவாதிகள் கடத்திய 130 மாணவர்கள் மீட்பு
ADDED : டிச 23, 2025 11:08 AM
அபுஜா: நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என, 130 பேரை ராணுவத்தினர் அதிரடியாக மீட்டனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல் - குவைதா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாதிகள் பணத்திற்காக பொது மக்களை, குறிப்பாக பள்ளி மாணவர்களை கடத் துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்நாட்டின் நைஜர் மாநிலத்தில் உள்ள பள்ளியில் கடந்த மாதம் 21ம் தேதி ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதிகள், 300க்கும் மேற் பட்ட மாணவர்களையும், 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றனர்.
பயங்கரவாதிகளிடமிருந்து, 50 மாணவர்கள் தப்பி வந்தனர். ராணுவ நடவடிக்கைகளால், இம்மாத துவக்கத்தில், 100 மாணவர்களை, பயங்கரவாதிகள் விடுவித்தனர். இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என, 130 பேரை ராணுவம் நேற்று அதிரடியாக மீட்டுள்ளது.

