ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி.,க்கு அ.தி.மு.க.,வில் பதவி ஏன்?
ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி.,க்கு அ.தி.மு.க.,வில் பதவி ஏன்?
ADDED : டிச 17, 2025 06:32 AM

திண்டிவனம்: சமீபத்தில் கட்சியில் இணைந்த ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி.,க்கு, அ.தி.மு.க.,வில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த சங்கர், ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சமீபத்தில் திண்டிவனத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இவருக்கு அ.தி.மு.க.,வில் மாநில ஜெ.,பேரவை துணைச்செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சங்கர், வரும் சட்டசபைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடக்கூடும் என்பதால், கட்சியில் இணைந்ததும், அவருக்கு மாநில அளவில் பதவி வழங்கப்பட்டிருப்பதாக அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறினர்.
ஏற்கனவே விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சர் சண்முகம், கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,வின் லட்சுமணனிடம் தோல்வி அடைந்தார்.
அதையடுத்து, விழுப்புரம் தொகுதியை விடுத்து, அருகில் இருக்கும் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்து, கட்சித் தலைமையிடம் விருப்ப மனு வழங்கி உள்ளார். இந்நிலையில், விழுப்புரம் தொகுதியில் சங்கரை போட்டியிட வைக்க, அ.தி.மு.க., - மா.செ.,வான சண்முகம் விரும்புவதாகவும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.

