ADDED : பிப் 07, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அமைச்சர் முருகனை, பார்லிமென்டில் தகுதியற்றவர் என, தி.மு.க.,வின் மூத்த உறுப்பினர் டி.ஆர்.பாலு அவதுாறாகப் பேசியது கண்டிக்கத்தக்கது.
இளம் வயதில் சுறுசுறுப்பாக அமைச்சராக பணியாற்றுகிற, இளம் தமிழர் மீது,தி.மு.க.,வுக்கு வெறுப்பு ஏன்; வன்மம் ஏன்?
ஒரு தமிழன் அமைச்சராக இருக்கிறார்என்பதாலா அல்லது நீதிக்கட்சியின் கொள்கை வழி நடப்பதாக மார்தட்டிக் கொள்கிற,தி.மு.க.,வின் பட்டியலின வெறுப்பினாலா? டி.ஆர்.பாலுவும், தி.மு.க.,வும் தமிழர்களிடத்திலும், பட்டியலின சமுதாய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
-- நாராயணன் திருப்பதி,
துணை தலைவர்,
தமிழக பா.ஜ.,

