தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ உதயநிதி, சேகர்பாபு வெற்றிக்கு கை கொடுத்தது யார் ஓட்டு? ஓர் சிறப்பு அலசல்

 உதயநிதி, சேகர்பாபு வெற்றிக்கு கை கொடுத்தது யார் ஓட்டு? ஓர் சிறப்பு அலசல்

 உதயநிதி, சேகர்பாபு வெற்றிக்கு கை கொடுத்தது யார் ஓட்டு? ஓர் சிறப்பு அலசல்

8


UPDATED : மே 05, 2026 09:38 PM

ADDED : மே 05, 2026 07:49 PM

Follow on GoogleFavourite on Google

8

UPDATED : மே 05, 2026 09:38 PM ADDED : மே 05, 2026 07:49 PM


8
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் உதயநிதியும், துறைமுகத்தில் சேகர்பாபுவும் வெற்றி பெற, முஸ்லிம் ஓட்டு கை கொடுத்துள்ளதாக, தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 59 தொகுதிகளில் தி.மு.க., வென்றது. 16 தொகுதிகள் கொண்ட தலைநகர் சென்னையில், 14 இடங்களை தமிழக வெற்றி கழகம் வென்றுள்ளது. சென்னை கொளத்துார் தொகுதியில், நான்காவது முறையாக போட்டியிட்ட ஸ்டாலின், 8795 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனால், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் உதயநிதி, துறைமுகத்தில் சேகர்பாபு ஆகியோர் வெற்றியை ருசித்துள்ளனர்.

சென்னையில் தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாக கருதப்படும் கிறிஸ்துவர்கள், பட்டியலின மக்களின் ஓட்டுக்களில் பெரும் பகுதி, த.வெ.க.,விற்கு மடை மாறியுள்ளது. இதனால், முதல்வர் ஸ்டாலினே தோற்கும் நிலை ஏற்பட்டது.

கிறிஸ்துவர்கள் ஓட்டுக்களில் பெரும் பகுதி, த.வெ.க.,விற்கு மாறிய நிலையில், முஸ்லிம் ஓட்டுக்களில் பெரும் பகுதி, தி.மு.க.,விற்கு கிடைத்துள்ளது. இதனால், முஸ்லிம் ஓட்டுக்கள் கணிசமாக உள்ள துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிகளில், தி.மு.க., வென்றுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இதேபோல, ஆம்பூர், வந்தவாசி, விழுப்புரம், அரவக்குறிச்சி, நாகை, திருவாரூர், திருவையாறு, ராமநாதபுரம், கடையநல்லுார், தென்காசி, பாளையங்கோட்டை ஆகிய சட்டசபை தொகுதிகளிலும், தி.மு.க.,வின் வெற்றிக்கு முஸ்லிம் ஓட்டு கைகொடுத்ததாக, அக்கட்சியினர் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us