சாலையில் சென்றபோது கார் தீப்பிடித்து எரிந்து நாசம்
சாலையில் சென்றபோது கார் தீப்பிடித்து எரிந்து நாசம்
ADDED : நவ 11, 2024 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெயங்கொண்டம்: அரியலுார் மாவட்டம், ஜமீன்குளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜராஜன், 40. இவர், தன், 'சைலோ' காரில், தா.பழூர் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் மீனம்பாடி ஏரி அருகே சென்ற போது, காரில் திடீரென தீப்பிடித்தது.
உடனே அவர் இறங்கினார். பின், கார் முழுதும் தீ பரவி, கொழுந்து விட்டு எரிந்தது. ஜெயங்கொண்டம் தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். எனினும், கார் முழுதும் எரிந்து விட்டது. ஜெயங்கொண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.

