பா.ஜ., பா.ம.க கூட்டணிக்கு திருமாவளவன் போடும் மார்க் என்ன?
பா.ஜ., பா.ம.க கூட்டணிக்கு திருமாவளவன் போடும் மார்க் என்ன?
ADDED : மார் 19, 2024 11:50 AM

சென்னை: 'பா.ஜ., பா.ம.க கூட்டணியால் பெரும் ஓட்டு வங்கி பலன் கிடைக்காது' என வி.சி.க., கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விழுப்புரம் தொகுதியில் மீண்டும் பானை சின்னத்தில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதியில் 6வது முறையாக நான் போட்டியிடுகிறேன். இந்த தொகுதியில் மக்கள் எனக்கு இரண்டு முறை வெற்றி வாய்ப்பை தந்தார்கள். அதேபோல் இந்த முறை மக்கள் என்னை வெற்றி பெற செய்து பார்லிமென்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.
விவசாயிகள், தொழிலாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜி.எஸ்.டி கொண்டு வந்ததால் சிறு, குறு தொழிலாளர்கள் நலிவடைந்துள்ளனர். சமூகநீதி என்று வருகையில் ஒரே கோட்டில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இருக்கும். லோக்சபா தேர்தலில் மக்கள் அனைவரும் 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும். எம்.பி.சி., பிரிவினரை பா.ம.க கைவிட்டாலும் வி.சி.க., உறுதியாக இருக்கும். மக்கள் மத்தியில் பா.ஜ., வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது. இதனை மக்கள் அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

