கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள்? கமல் கொடுத்த வித்தியாச பதில் இதுதான்!
கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள்? கமல் கொடுத்த வித்தியாச பதில் இதுதான்!
UPDATED : செப் 20, 2025 07:07 PM
ADDED : செப் 20, 2025 07:06 PM

சென்னை: கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள்? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'நீங்கள் கட்சியில் சேருங்கள் நான் சொல்கிறேன்' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பதிலளித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் கமல் கூறியதாவது: நூறாண்டுகள் மக்கள் நீதி மய்யம் செயல்பட வேண்டும் என்பதுதான் ஆசை. ஏன் ஆசைப்படக்கூடாது. உங்கள் பிள்ளை நூறு வருடங்கள் வாழ வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட மாட்டீர்களா? உங்க அப்பா ஆசைப்பட மாட்டாரா? அதே ஆசை தான் எனக்கும். கொண்டு செல்கிறவர்கள் பொறுப்பு என்ன என்பதை தான் நான் ஞாபகப்படுத்தினேன்.
எனக்கு 70 வயது ஆகிவிட்டது. மக்கள் நீதி மய்யம் நூறு வருடம் வாழ வேண்டும் என்றால் யார் வேலை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கட்சியினர் கூறினர்.
சில சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கிறது. அதையெல்லாம் சரி செய்து விடுவோம் என்று நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. தேர்தல் பிரசாரம் செய்வது குறித்து கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வேன்.
கட்சியில் இருக்கும் அனைவருமே வேலை செய்கிறார்கள். யாருமே இங்க 24×7 அரசியல்வாதி கிடையாது. அவரவர்களுக்கு வேலை இருக்கிறது. அவர்கள் வேலையை செய்து கொண்டு கட்சிப் பணியையும் செய்கின்றனர். மீதமுள்ள இருக்கும் நேரத்தில் எல்லாம் அவர்கள் கட்சி வேலையை தான் செய்வார்கள். இவ்வாறு கமல் கூறினார்.
வித்தியாசமான பதில்!
கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள்? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'நீங்கள் கட்சியில் சேருங்கள் நான் சொல்கிறேன்' என கமல் பதிலளித்தார்.