ADDED : ஜூலை 26, 2025 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ஜ., உடன் அணி சேர்ந்து நிற்கும் வரை, எந்த கட்சியும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேராது. பா.ஜ., உடன் கூட்டணி வைத்திருப்பது அ.தி.மு.க., நலனுக்கு விரோதமானது.
அதை புரிந்து கொள்ளாமல், யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்ற விரக்தியில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னுக்குபின் முரணாக பேசி வருவது, அவர் மீதான மதிப்பை குறைக்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை பொறுத்தவரை, எங்கள் தலைமையில் ஆட்சி அமைந்தால் தவிர, வேறு எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் பங்கு கேட்க மாட்டோம். விஜயின் தமிழக வெற்றிக் கழகம், தன் கொள்கை முடிவை அறிவித்துள்ளது. இருந்த போதும், அதனுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு குறைவு.
-சண்முகம்,
மாநில செயலர், மா.கம்யூ.,

