'வேண்டும் மோடி; மீண்டும் மோடி' வாசகத்துடன் மெகா பலுான்
'வேண்டும் மோடி; மீண்டும் மோடி' வாசகத்துடன் மெகா பலுான்
ADDED : பிப் 20, 2024 01:46 AM

திருப்பூர்:திருப்பூரில் நடைபெற உள்ள, 'என் மண்; என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு மற்றும் பிரதமர் மோடி வருகை குறித்து, பலுான் பறக்க விடுவது உள்ளிட்ட பல்வேறு வகையில் பா.ஜ.,வினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை திருப்பூரில், 'என் மண்; என் மக்கள்' யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார்.
பல்லடத்தில் இதன் நிறைவு விழாவையொட்டி பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். பொதுக்கூட்ட ஏற்பாடுகளில், பா.ஜ.,வினர் மும்முரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, வடக்கு, தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில், 19 மண்டலங்களில் வாகன பிரசாரம் செய்து, நோட்டீஸ்களை வழங்கினர்.
நேற்று மாலை மங்கலம் ரோடு குமரன் கல்லுாரி அருகே பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தி, மாநாடு குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை மக்களிடம் வழங்கி அழைத்தனர். மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே பெரியளவில் ராட்சத பலுான் ஒன்றை பறக்க விட்டுள்ளனர். அதில், 'வேண்டும் மோடி; மீண்டும் மோடி' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

