ADDED : செப் 13, 2025 04:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின், 'மக்கள் சந்திப்பு பிரசாரம்' திருச்சியில் இன்று துவங்குகிறது. தொடர்ந்து அரியலுார், பெரம்பலுாரில் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஒரு நாள் நிகழ்ச்சிக்காக, போலீசார், 12 நாட்கள் அலைக்கழித்து, 23 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளனர்.
வேறு எந்த ஒரு அரசியல் கட்சி தலைவருக்கும் இல்லாத அளவுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. திருச்சியில், 25 கி.மீ., துாரம் சாலை வழியாக, மக்கள் சந்திப்பு நடக்கும்போது, நிகழ்ச்சிக்கு வருபவர்களை எப்படி கண்காணித்து தடுக்க முடியும்? கொடிகள் கட்ட பயன்படும் குச்சியை கையில் வைத்திருக்கக் கூடாது என்பது, எந்த கட்சிக்கும் இதுவரை விதிக்காத நிபந்தனை. விஜய்க்கு, தி.மு.க., அரசு எல்லா வகையிலும் முட்டுக்கட்டை போடுகிறது.
அறிவாலயத்தில் ஒரு வாரமாக ஆலோசனை நடத்தி, நிபந்தனைகள் விதிக்கப்பட்டதோ என தோன்றுகிறது. - நிர்மல்குமார், துணை பொதுச்செயலர், த.வெ.க.,