ADDED : ஆக 06, 2025 08:48 AM

மறுபடியும் அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, மாற்றி ஓட்டுப் போடுகிறேன் என தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட்டதன் விளைவை அனுபவிக்கிறான். பிசாசை விவகாரத்துப் பண்ணி விட்டு, பேயை திருமணம் செய்து கொண்டது போல் தான் இதுவும்.
புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் நடிகர் விஜய், எந்த தத்துவத்துக்காக போராட வந்திருக்கிறார் என யாராவது கேட்டதுண்டா? போராடி யாரும் பார்த்ததுண்டா? விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது ஏற்படாத எழுச்சியா, இப்போது ஏற்பட்டு விட்டது?
ஈ.வெ.ரா., அண்ணாதுரையை ஆதர்ஷமாக வைத்திருக்கிறேன் என்றால், அவரும் தி.மு.க.,வைத்தான் வீழ்த்தியாக வேண்டும். அண்ணாதுரையை முன்னோடியாக வைத்து, ஒருவர் போய்க் கொண்டே இருக்கிறார். அவரை வீழ்த்த வேண்டும் என்றால், கண்டிப்பாக மாற்றுத் திட்டம் இருக்க வேண்டும். அதில்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.
-- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்

