பட்டா மாறுதலுக்காக ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சிக்கினார் விஏஓ!
பட்டா மாறுதலுக்காக ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சிக்கினார் விஏஓ!
ADDED : டிச 27, 2025 02:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பட்டா மாறுதலுக்காக 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஒ ஜான் அருளப்பன் என்பவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பேராம்பூர் பகுதியை சேர்ந்தவர் அருளானந்த். இவரது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து இருந்தார். பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு, விராலிமலை வி.ஏ.ஓ., ஜான் அருளப்பன் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத அருளானந்த், புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த ஜான் அருளப்பனிடம் 6 ஆயிரம் ரூபாயை அருளானந்த் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பணத்தை வாங்கும் போது ஜான் அருளப்பனை கைது செய்தனர்.

