ADDED : டிச 24, 2025 08:01 PM

மரக்காணம்: பட்டா மாற்றம் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், முன்னுாரை சேர்ந்தவர் சுரேந்தர், ஆட்டோ ஓட்டுநர். குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். சில மாதங்களுக்கு முன் ஆலங்குப்பத்தில், தன் மனைவி பெயரில், வீட்டு மனைக்கு பட்டா மாற்றம் செய்ய கணினி மூலம் பதிவு செய்து இருந்தார்.
ஆனால், பட்டா மாற்றம் செய்யாமல், ஆலங்குப்பம் வி.ஏ.ஓ., சரவணன் தாமதம் செய்து வந்தார். அவர், சுரேந்தரிடம், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இந்த விவரத்தை சுரேந்தர், விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார், சுரேந்தரிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை சரவணனிடம் மதியம் சுரேந்தர் கொடுத்தார். பணத்தை பெற்ற சரவணனை போலீசார் கைது செய்தனர்.

