sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாநில அளவில் விளையாட்டு போட்டி துாத்துக்குடி மண்டலம் சாம்பியன்

/

மாநில அளவில் விளையாட்டு போட்டி துாத்துக்குடி மண்டலம் சாம்பியன்

மாநில அளவில் விளையாட்டு போட்டி துாத்துக்குடி மண்டலம் சாம்பியன்

மாநில அளவில் விளையாட்டு போட்டி துாத்துக்குடி மண்டலம் சாம்பியன்


ADDED : பிப் 13, 2025 01:08 AM

Google News

ADDED : பிப் 13, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை, பெரியமேடு, நேரு மைதானத்தில் நேற்று நடந்த, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில், துாத்துக்குடி மண்டலம், மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைத் துறை சார்பில், தமிழகம் முழுதும் சிறப்பு இல்ல விடுதியில் தங்கி படிக்கும் மாணவ - மாணவியருக்கு, மாநில அளவில் விளையாட்டுப் போட்டி, கடந்த இரண்டு நாட்களாக, சென்னையில் நடந்தது. இதில், சென்னை, துாத்துக்குடி, தஞ்சாவூர், ராணிப்பேட்டை என, நான்கு மண்டலங்களாக, மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற, 163 விடுதிகளைச் சேர்ந்த, 364 மாணவ - மாணவியர், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.

சென்னை, நேரு மைதானத்தில் போட்டிகள் நடந்தன. மாநில அளவில், துாத்துக்குடி மண்டல விடுதி மாணவர்கள், ஓவர்-ஆல் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

சிறந்த தனிநபர் ஜூனியர் மற்றும் சீனியர் ஆண் பிரிவில், சென்னை மாணவர் அபிஷேக் ராஜ், தஞ்சாவூர் மாணவர் பி. கிஷோர்; பெண்கள் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் தஞ்சாவூர் மாணவி ஆஷா, துாத்துக்குடி மாணவி பி. பிரியதர்ஷினி, ஆகியோர் பரிசு பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, துணை முதல்வர் உதயநிதி பரிசுகள் வழங்கினார்.






      Dinamalar
      Follow us