விபத்து வழக்கில் திருப்பம்; திட்டமிட்டு கார் ஏற்றிய திமுக சேர்மன் கொலை வழக்கில் கைது
விபத்து வழக்கில் திருப்பம்; திட்டமிட்டு கார் ஏற்றிய திமுக சேர்மன் கொலை வழக்கில் கைது
UPDATED : செப் 11, 2025 12:00 PM
ADDED : செப் 11, 2025 11:27 AM

திருப்பூர்: மக்களுக்கு பயன்பாடில்லாத ரோடு குறித்து புகார் மனு அளித்தவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பேரூராட்சி சேர்மன் (திமுக) கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம், கருகம்பாளையத்தில் மொபட்டில் சென்ற பழனிசாமி 57, கார் மோதிய விபத்தில் இறந்தார். இதைப்பார்த்த பலரும், சாலையில் அஜாக்கிரயால் ஏற்பட்ட விபத்து என்றே கருதினர். போலீசாரும் அப்படியே நினைத்தனர்.
ஆனால், விசாரணையில் அதிர்ச்சியான விஷயங்கள் வெளியாகின. போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர், சாமளாபுரம் பேரூராட்சி தி.மு.க., சேர்மன் விநாயகா பழனிசாமி, 60, என்று தெரியவந்தது. அவரை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.
அதன்பிறகு இன்னொரு அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியானது. இறந்த பழனிசாமி, மக்களுக்கு பயன்பாடில்லாத, தனியார் இடத்தில் போடப்பட்ட ரோடு தொடர்பாக கலெக்டரிடம் பேரூராட்சி நிர்வாகம் மீது புகார் கொடுத்துள்ளார். இதனால், சேர்மன் விநாயகா பழனிசாமிக்கும், இறந்து போன பழனிசாமிக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.
இதன் காரணமாகவே, மது போதையில் இருந்த சேர்மன், காரை ஏற்றி கொன்றது தெரியவந்தது. இதை உறுதி செய்த மங்கலம் போலீசார், பேரூராட்சி சேர்மனை கைது செய்தனர்.