ADDED : அக் 25, 2024 12:43 AM

* தீபாவளிக்கான செலவு, வாங்க வேண்டிய துணிமணி, பொருட்கள் முதலியவற்றை பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள்; வருமானத்தை கணக்கிட்டு அதற்கேற்பஅவசியமான செலவுகளை மேற்கொள்ளுங்கள்
* வேலைகளை நாமே இழுத்துப்போட்டு செய்வதைவிட, குடும்ப உறுப்பினர்கள்மற்றும் குழந்தைகளை பங்கேற்க செய்தால், அவர்களுக்கும் மகிழ்ச்சி பிறக்கும்
* தீபாவளிக்கு சில நாட்கள் முன்பாகவே, பலகாரங்கள்செய்யத் தேவையான மூலப் பொருட்களை தயார் செய்து கொள்ளுங்கள்
* பாதுகாப்பான பட்டாசுகளை, தரம் பார்த்து குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுங்கள்; காசை கரியாக்கும் விஷயமாக இருந்தாலும் கவனம் அவசியம்.
* மாவை வறுத்து, பலகாரம் செய்தால், பலகாரங்கள் மொறுமொறுவென்று இருக்கும்
* பலகாரங்கள் செய்யும்போது, எண்ணெய் பொங்கி வழிவதை த்தவிர்க்க, இரண்டு கொய்யா இலை,இஞ்சி துண்டு, சிறிதளவு புளி இவற்றில் ஏதேனும் ஒன்றை காயும் எண்ணெயில்போடலாம்
* எந்தவிதமான பலகாரமாக இருந்தாலும், மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி பிசைந்தால், அதிக எண்ணெய் குடிக்காது
* தேன்குழல் செய்யும்போது, உருளைக் கிழங்கை வேகவைத்து சேர்த்தால்,சுவையும், மொறு மொறுப்பும் கூடும்
* சீடை, முறுக்கு, தட்டை எது செய்தாலும், மாவில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், தேங்காய் பால் கலந்தால், சுவையும்,மணமும் அதிகரிக்கும்
* சீடை மாவில், உப்பு கரைத்த தண்ணீர் விட்டு பிசைந்தால், சீடை வெடிக்காது; அதேநேரம் எண்ணெய் ரொம்பவும் காயக்கூடாது
* பச்சரிசியை ஊற வைத்து, தண்ணீரை வடித்து, மாவாக்கி, வறுத்து சீடை செய்தால் வெடிக்காது
* பொட்டுக்கடலை பொடியில் இனிப்புகள் செய்தால், சுவையாக இருப்பதுடன், சீக்கிரமும் செய்யலாம். நெய்யும், சர்க்கரையும் குறைவாக சேர்க்கவும்.
* முள்ளு முறுக்கு செய்யும்போது, எள்ளுக்கு பதிலாக ஓமம் சேர்த்தால், மணமாக இருக்கும்; ஜீரணமும் ஆகும்
* ஓமப்பொடி செய்யும்போது,ஓமத்தை தண்ணீரில் ஊற வைத்து, அரைத்து, வடிகட்டி மாவில் போட்டு பிசையலாம். ஓமத்தை வறுத்து, பொடித்தும் மாவில் சேர்க்கலாம்
* வெண்ணெய், துாள் உப்பு இரண்டையும் முறுக்கு மாவில் சேர்த்து பிசைந்தால், மாவு நல்ல பதமாக இருக்கும்
* ரிப்பன் பேடாவுக்கு அரிசி மாவு, கடலை மாவுடன் சிறிதளவு உளுந்த மாவையும் சேர்த்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது; கரகரப்பு கூடும்
* கடலை உருண்டை செய்யும்போது, வெல்லப் பாகுடன் சர்க்கரை சிறிது சேர்த்தால் சுவை கூடும்; கரகரவென்று இருக்கும்
அப்புறம் என்ன... பிள்ளைகள் பட்டாசை சுட்டுத் தள்ளட்டும்; நீங்கள் பலகாரங்களை சுட்டுத் தள்ளுங்கள்!
நவராத்திரி பண்டிகையை விமரிசையாக கொண்டாடிய மக்கள், அடுத்த கட்டமாகதீபாவளியை கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர். நம் கலாசாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது இந்த தீபாவளி பண்டிகை. அவற்றை சிறப்பாக கொண்டாட, வாசகர்களுக்கு சில அவசியமான டிப்ஸ்...

