அமலாக்கத்துறை எனும் பொம்மைகளை வைத்து அச்சுறுத்தல்: ராகுல் குற்றச்சாட்டு
அமலாக்கத்துறை எனும் பொம்மைகளை வைத்து அச்சுறுத்தல்: ராகுல் குற்றச்சாட்டு
UPDATED : பிப் 19, 2024 06:25 PM
ADDED : பிப் 19, 2024 05:01 PM
லக்னோ: 'பா.ஜ.,வின் விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற பொம்மைகள் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பயன்படுத்தப்படுகிறது' என காங்., எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் இன்று (பிப்.,19) மேற்கொண்டார். 
அப்போது ராகுல் பேசியதாவது: ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஜனாதிபதி முர்முவை கூட அழைக்கவில்லை. ஜனாதிபதியை அழைக்காதது அவமதிக்கும் செயல் ஆகும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது.


