கடவுளை பற்றி பேச தகுதி இல்லாதவர்கள்: திமுக, கம்யூ மீது அண்ணாமலை சாடல்
கடவுளை பற்றி பேச தகுதி இல்லாதவர்கள்: திமுக, கம்யூ மீது அண்ணாமலை சாடல்
ADDED : செப் 22, 2025 11:06 PM

திருவனந்தபுரம்: '' திமுக, கம்யூனிஸ்ட்களுக்கு கடவுளைப் பற்றி பேச அடிப்படையில் எந்த தகுதியும் இல்லை,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மக்களை ஏமாற்ற
கேரள மாநிலம் பந்தளத்தில் நடந்த சபரிமலை சமரக்ஷண சங்கமத்தில் அண்ணாமலை பேசியதாவது: செப்டம்பர் 20 ல் அனைத்துலக ஐயப்ப பக்தர்கள் மாநாட்டை கேரள அரசு ஏற்பாடு செய்தது. இந்த விழாவிற்கு முக்கிய விருந்தினராக அழைத்தவர் என்பது தான் முக்கியம். தமிழக முதல்வரை அழைத்தார்கள். சனாதன தர்மத்தை வேரோடு அழிக்க வேண்டும் என நினைப்பவர்கள். சனாதனம் டெங்கு, மலேரியா கொசுவை போன்றது. அதை அழிக்க வேண்டும் என சொன்னவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி. ஸ்டாலினை முக்கிய விருந்தினராக கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைக்கும் போதே தெரியும், இந்த மாநாட்டை ஐயப்பனுக்காக போடப்படும் நிகழ்வு கிடையாது. அரசியலில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க போடுகிறது என்று.
முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனை , 'நாஸ்திக டிராமாச்சாரி' என்று அழைப்பேன். நாத்திகத்தை விரும்பக்கூடிய மற்றும் டிராமா நடத்த வேண்டும் என்று நினைக்கக்கூடிய இருவர் சேர்ந்து நாஸ்திக் டிராமாச்சாரியாக நிகழ்வை நடத்தி முடித்து இருக்கிறார்கள். அந்த நிகழ்வுக்கு யாரும் வரவில்லை. இருக்கைகள் காலியாக இருக்கிறது. அவர்கள் கஷ்டப்பட்டு கூட்டத்தை போட்டு ஐயப்பனுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லி தங்களது பெயருக்கு இன்னும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
என்ன உரிமை
போலீசாரை வைத்து ஐயப்ப பக்தர்களை அடித்து நொறுக்கிய முதல்வர் பினராயி விஜயனுக்கு, ஐயப்பனை பற்றி மாநாடு நடத்த என்ன உரிமை இருக்கிறது என ஐயப்ப பக்தர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
தமிழகத்தில் சனாதன தர்மம் வேண்டாம் என நினைக்கும் திமுக பழநியில் முருகன் மாநாடு நடத்தியது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி, ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடத்துகிறது. இருவருக்கும் கடவுளை பற்றி பேசுவதற்கு அடிப்படையில் எந்த தகுதியும் இல்லாதவர்கள்.
நீலிக்கண்ணீர்
கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கட்டவிழ்த்துவிட்ட அட்டூழியத்தை பார்க்க வேண்டும். அவர்கள் வடிக்கும் நீலிக்கண்ணீரை வடிக்கின்றனர். கடவுளே இல்லை என சொன்னவர், கடவுளை நம்பாத பினராயி விஜயன், பகவத் கீதையை பற்றி பாடம் எடுக்கிறார். இது ஆச்சர்யமாக உள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்ட்கள் பகவத் கிதையை படிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும். நரகத்துக்கு போக 3 வழி உள்ளது. காமம், பேராசை, கோபம் ஆகியன நரகத்துக்கு வேகமாக அழைத்துச் செல்லும். இந்த மூன்றும் கேரள கம்யூனிஸ்ட் அரசிடம் இருக்கிறது.
ஒரு அரசனை பொறுத்தவரை, கொடுமை செய்வது, சட்டத்தை தவறாக பயன்படுத்துவது என்பது, அரசனுக்கு கீழ் இருக்கும் கொலைகாரனை விட பெரிய பாவத்தை சம்பாதிப்பான் என திருவள்ளுவர் கூறுகிறார்.2018 - 19ல் பந்தளத்தில் அவர் நடந்து கொண்ட விதம் மக்களை விஜயன் நடத்திய விதம் எது.
காணவில்லை
ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு எவ்வளவு பிரச்னை உருவாக்கினார்கள். அரசன் செய்யும் தவறை விஜயன் செய்துள்ளார். எனவே பகவத் கிதையை பாடத்தை எங்களுக்கு எடுக்காதீர்கள். கண்ணாடியை பார்த்து உங்களுக்கு சொல்லிக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் கோவில்களை ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கிறது. 1985 ல் 5.25லட்சம் ஏக்கர் கோவில் நிலம், இருந்த நிலம் தற்போது 4 லட்சம் ஏக்கர் நிலம் தான் உள்ளது. ஒரு 1.25 லட்சம் ஏக்கர் காணவில்லை.
நம்மை ஏமாற்றுவதற்காக மட்டுமே ஒரு கூட்டம் ஒன்றாக நடத்தி கொண்டுள்ளனர். கடவுளை அரசியலுக்கு பயன்படுத்துவது யார் என பார்க்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.