இயல் இசை நாடக மன்ற நிதியுதவி வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்
இயல் இசை நாடக மன்ற நிதியுதவி வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 25, 2025 06:27 AM

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில், புதிய நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்ற, 2.50 லட்சம் ரூபாய்; வரலாறு, புராண, சமூக நாடகங்களை உருவாக்கி மேடையேற்ற, 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
அதேபோல், இசை, நாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்த தன்னார்வ கலை நிறுவனங்களுக்கு, 20 லட்சம் ரூபாய்; நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 கலைஞர்களுக்கு இசைக் கருவிகள், ஆடை, அணிகலன்கள் வாங்க, தலா 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
கலை சார்ந்த நுால்களை பதிப்பிக்க, 2 லட்சம் ரூபாய் வீதம் ஐந்து நுால்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் பயன் பெற தகுதியானோர், வரும் ஜன., 5க்குள், 'தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 28' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு: 044 - 2493 7471 என்ற தொலைபேசி எண்ணிலோ, ' tneinm@gmail.com மற்றும் ' tneinm@tn.gov.in ' என்ற மின்னஞ்சல் முகவரிகளிலோ தொடர்பு கொள்ளலாம்.

