இன்னுயிர் காப்போம் திட்ட சிகிச்சை செலவு ரூ.2 லட்சமானது
இன்னுயிர் காப்போம் திட்ட சிகிச்சை செலவு ரூ.2 லட்சமானது
ADDED : பிப் 20, 2024 01:32 AM
குடும்பத்தினர் அனைவரும், வீடுகளில் இருந்தே பயன் பெறும், 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்திற்கு, 243 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்த, மருத்துவ காப்பீடு தொகுப்பு நிதியிலிருந்து, 200 கோடி ரூபாய் செலவிடப்படும்
சாலை விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும், 'இன்னுயிர் காப்போம்' திட்டத்தில், இலவச சிகிச்சைக்கான உச்சவரம்பு தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்
ராமேஸ்வரம், செந்துறை, ஸ்ரீபெரும்புதுார், அரக்கோணம் ஆகிய அரசு மருத்துவமனைகள், தேனி, சேலம் ஆகிய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 50 படுக்கைகள் கொண்ட ஆறு தீவிர சிகிச்சை பிரிவுகள், 142 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்
ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 40 கோடி ரூபாய் மதிப்பில், 100 படுக்கைள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டப்படும்
25 வட்டம் மற்றும் வட்டம் சாரா அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள், 87 கோடி ரூபாயில் கட்டப்படும். சென்னை அரசு பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையும், 64 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்
25 அரசு மருத்துவமனைகளில், சிறப்பு போதை பழக்க மீட்பு மையங்களை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்டோருக்கு தேவையான மனநல ஆலோசனை சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகள், 20 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்
இந்த 2024 - 25 நிதியாண்டு வரவு - செலவு திட்ட மதிப்பீடுகளில், மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறைக்கு, 20,198 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில், 18,661 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

