ADDED : மார் 27, 2025 09:13 PM

பா.ஜ., உடன் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க.,வினர் தங்கள் நிலைபாட்டை விரைவில் அறிவிக்கக்கூடும். இரு கட்சியினரும், பொதுவெளியில் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதைக் காட்டிலும், விட்டுக் கொடுத்துச் செல்வது, தமிழகத்துக்கு நன்மை பயக்கும்.
அமலாக்கத்துறை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால், டாஸ்மாக் ஊழல் ஒரு லட்சம் கோடியை தாண்டும். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என ஆதாரமின்றி குற்றச்சாட்டு தெரிவிக்கக்கூடாது. மும்மொழி கொள்கை தமிழக மக்களுக்கு எதிரானது இல்லை. இரு மொழிக் கொள்கை இங்கு அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் உள்ளது. அரசியலுக்காக மட்டுமே தி.மு.க.,வினர் ஹிந்தி, புதிய கல்வி கொள்கையை எதிர்க்கின்றனர்.
தி.மு.க., தான் தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் தமிழ் மொழி இல்லை.
கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம்

