பொங்கலுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் தான்; ரொக்கம் இல்லை!
பொங்கலுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் தான்; ரொக்கம் இல்லை!
UPDATED : டிச 31, 2025 06:14 PM
ADDED : டிச 31, 2025 06:11 PM

சென்னை: பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு ஆகியவை வழங்குவதற்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஜன.,15 பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை ரேசன் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்கப்படும். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பொங்கல் பரிசுடன் ரொக்கம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், 2 கோடியே 22 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு வழங்குவதற்காக ரூ. 248 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், ரொக்கம் தருவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

