ADDED : டிச 31, 2025 10:46 AM

சென்னை: ஜனவரி 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்என் ரவியின் உரையுடன் தொடங்குகிறது. ஜனவரி 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
அமைச்சரவை கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற உள்ள முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு முன்னதாக வரும் பட்ஜெட் என்பதால், இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏற்கனவே, ஆளும் திமுக அரசு 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

