UPDATED : செப் 23, 2025 12:54 PM
ADDED : செப் 23, 2025 11:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக சட்டசபை அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
அக்டோபர் 14ம் தேதி சட்டசபை காலை 9.30 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கும். முதல் நாளில், மறைவுற்ற முன்னாள் சட்டசபை எம்எல்ஏக்கள் குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். வால்பாறை தொகுதி எம்எல்ஏ கந்தசாமி மறைவு குறித்தும், உயிரிழந்த பிரபலங்கள் குறித்தும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
அக்டோபர் மாதம் 14ம் தேதிக்கு முன்னதாக, ஏதாவது ஒரு தேதியில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு, சட்டசபை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்படும். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.