ADDED : மே 08, 2024 03:26 PM
சென்னை: தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அடுத்த கல்வியாண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
நான் முதல்வர் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்லூரிக் கனவு 2024 துவக்க விழா சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் துவங்கியது.
நிகழ்ச்சியை துவங்கி வைத்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசுகையில், ‛‛ தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தும் தமிழ் புதல்வன் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

