அமைச்சர்களுடன் நடந்த பேச்சு தோல்வி: ஜன., 6 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
அமைச்சர்களுடன் நடந்த பேச்சு தோல்வி: ஜன., 6 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
UPDATED : டிச 22, 2025 07:16 PM
ADDED : டிச 22, 2025 06:48 PM

சென்னை: அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், வரும் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
தொடர் போராட்டம்
'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்; அரசு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும்' என, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தற்போதைய ஆளுங்கட்சி தரப்பில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இவற்றை நம்பி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள், தி.மு.க., வுக்கு ஆதரவு அளித்தன. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிய உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

தோல்வி


ஏமாற்றம்
இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கூறியதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளித்துள்ளது. திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்கும். லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளிக்கிறது.


