ADDED : பிப் 25, 2024 01:06 AM
திருச்சி,:''லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, அ.தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களுடன் இரண்டாம் கட்ட பேச்சு நடந்துள்ளது,'' என்று ச.ம.க., தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில், நேற்று இரவு, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, அ.தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களுடன் இரண்டாம் கட்ட பேச்சு நடந்துள்ளது.
கும்பகோணத்தில், கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நடக்கிறது. அதில், கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். இதில், நானே முடிவெடுப்பதில்லை.
அரசியல் நிலவரம், மக்களின் சிந்தனை ஆகியவற்றையும் சிந்தித்து, சிறந்த முடிவு எடுக்க வேண்டி உள்ளது. எந்தவித தவறும் நடக்காமல், எடுத்த முடிவு வெற்றி முடிவாக இருக்க வேண்டும். இதுவரை, தொகுதிப் பங்கீடு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
2026ல் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பேசியிருக்கிறேன்.
அதனால், லோக்சபா தேர்தலில் கட்சியின்பங்களிப்பு பற்றி கலந்து ஆலோசித்த பின், அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

