ADDED : டிச 12, 2025 03:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக அரசு, மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, 2023 செப்டம்பரில் துவக்கியது. முதல் கட்டமாக, 1.14 கோடி மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய், அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
விடுபட்ட மகளிருக்கு, 1,000 ரூபாய் வழங்கப்பட இருப்பதாக, துணை முதல்வர் உதயநிதி, இந்தாண்டு துவக்கத்தில் சட்டசபையில் அறிவித்தார். இதற்கான விண்ணப்பங்கள், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்டன.
அதில் தேர்வு செய்யப் பட்ட, 17 லட்சம் மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின், சென்னையில், இன்று துவக்கி வைக்கிறார்.

