ADDED : டிச 27, 2025 08:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்விஷயத்தில் இஸ்லாமியர் எந்த பிரச்னையும் இன்றி அமைதியாக இருக்கின்றனர். ஆனால் தி.மு.க., கூட்டணியினர் நீதிமன்றத்தை மதிக்காமல் மதவாத அரசியல் செய்கின்றனர். தேர்தலில் மதவாதத்தை துாண்டிவிட்டு, சதி திட்டத்தை அரங்கேற்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை சேர்த்துக் கொண்டு, தி.மு.க., முயற்சி செய்கிறதோ என்ற அச்சம் எழுகிறது.
கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கூட, பா.ஜ.,வை தரம் தாழ்த்தி பேசுகின்றனர். தி.மு.க., மதவாத கட்சியாக மாறியுள்ளது. மத அடிப்படையில், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஓட்டளிக்கின்றனர் என நினைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் மத மோதலை ஏற்படுத்த பார்க்கிறார்; சில நாட்களாக, மதவாத போக்குடன் முதல்வர் ஸ்டாலின் நடந்து கொள்கிறார். கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை என நான்கரை ஆண்டுகளில் மிக மோசமான ஆட்சியை தி.மு.க., நடத்தியுள்ளது.
- நாராயணன் திருப்பதி, செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,

