தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
ADDED : ஏப் 30, 2024 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகப்பட்டினம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் இன்று(ஏப்.,30) தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயமடைந்தார். அவர் ஓரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழக மீனவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான வலைகள் மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச்சென்றனர்.

