ADDED : டிச 28, 2025 03:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொழும்பு: நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் வாழ்த்து கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு உள்ளதாவது;
எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் விஜய் ஒருவர். அவரது சினிமா பயணமும், வெள்ளித்திரையில் அவரது ஆற்றலும் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தவை, மறக்க முடியாதவை.
சினிமா அத்தியாயத்தை முடித்துவிட்டு ஒரு புதிய பயணத்தில் அவர் அடியெடுத்து வைக்கும் போது, சினிமா நிச்சயமாக அவரது இருப்பை இழக்கும். அவருக்கு எப்போதும் வெற்றிதான், அதை தவிர வேறொன்றுமில்லை, எதிர்காலத்தில் எல்லாவற்றிலும் மிகச் சிறந்ததை பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு தமது பதிவில் நமல் ராஜபக்சே கூறி உள்ளார்.

