ரேஷனில் வெங்காயம், தக்காளி நிதி எதிர்பார்க்கும் சங்கங்கள்
ரேஷனில் வெங்காயம், தக்காளி நிதி எதிர்பார்க்கும் சங்கங்கள்
ADDED : அக் 15, 2024 04:32 AM
சென்னை : தமிழகத்தில் பெரிய வெங்காயம், தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், வெளிச்சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கிலோ, 70 - 80 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
இதனால், சென்னை, வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு அங்காடிகள் மற்றும் அம்மாவட்டங்களில் முக்கிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில், பெரிய வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்கின்றன.
இதற்காக, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம், 30 டன் வெங்காயத்தை, கூட்டுறவு துறை கடந்த வாரம் வாங்கியது. கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளிடம் இருந்து தக்காளி வாங்கப்பட்டு, கிலோ 50 முதல் 55 ரூபாய் வரை, விற்கப்படுகிறது.
இதுகுறித்து, ஒருவர் கூறியதாவது:
சங்கங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் உள்ளதால், விலை கட்டுப்பாடு நிதியத்தில் இருந்து நிதி அளித்தால், முக்கிய நகரங்களில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பெரிய வெங்காயம், தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

