தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ பா.ஜ., எதிர்பார்ப்பதை சீமான் செய்கிறார்: திருமாவளவன்

பா.ஜ., எதிர்பார்ப்பதை சீமான் செய்கிறார்: திருமாவளவன்

பா.ஜ., எதிர்பார்ப்பதை சீமான் செய்கிறார்: திருமாவளவன்


ADDED : அக் 24, 2024 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்:விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், அளித்த பேட்டி:

தி.மு.க., கூட்டணியில் விரிசல் வர வேண்டும் என்பது பழனிசாமியின் எதிர்பார்பாகவும், வேட்கையாகவும் இருக்கலாம். அவரின் வேட்கை தனிய வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார்.

கூட்டணி கட்சிகளுக்கு இடையில் பிரச்னையின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெறலாம். ஆனால் விரிசல் ஏற்படாது என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து விட்டார். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வழிமொழிகிறது.

திராவிடம் வேறு; தமிழர் வேறு என விவாதத்தை கூர்மைப்படுத்துவது சங் பரிவார் அமைப்புக்கு துணை போதாக அமையும். தமிழக கவர்னர் ரவி, ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் இதைத்தான் விரும்புகின்றனர்.

பா.ஜ., எதை எதிர்பார்க்கிறதோ, அதைத்தான் சீமான் செய்கிறார். சீமான் விவாதிப்பதெல்லாம் அப்படித்தான் இருக்கிறது. தி.மு.க., எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது வேறு.

திராவிடம் என்பது மரபினத்தை குறிக்கின்ற ஒரு சொல். ஆரியம் என்பதற்கு நேர் எதிரான ஒரு கருத்தியல். ஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்றவர்களுக்கு முன்பே திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். தேசிய இனத்தின் அடிப்படையில் தமிழர், திராவிடரை பாகுபடுத்தி சீமான் கூறுவது சரியான விவாதம் இல்லை. அது லாஜிக்கும் இல்லை. திராவிடமும், தமிழர் என்பதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஆனால், வெவ்வேறானவை. திராவிட இனம் என்பது தேசிய இனம் அல்ல மரபினம், தமிழ் என்பது மரபினம் அல்ல தேசிய இனம்.

தி.மு.க.,வை எதிர்கிறோம் என்ற அடிப்படையில் ஒட்டுமொத்த திராவிட அடையாளத்தையும் எதிர்ப்பது இனவாதத்தில் தான் முடியும். மக்களை நாம் குழப்பக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us