ADDED : மார் 07, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:சோழபுரம் பரக்கத் நிஷா என்பவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
என் மகன் முகமது அனஸ், 27, கடந்த, 2021ல் மாயமானார். சோழபுரம் போலீசில் புகார் செய்தோம். மகனுக்கு சித்த வைத்தியர் கேசவமூர்த்தியுடன் நட்பு ஏற்பட்டது.
போலீசார், அவரை கைது செய்து விசாரித்த போது, பணத்திற்காக உடலுறுப்புகளை திருட வேண்டும் என்ற நோக்கில் என் மகனை அவர் கொலை செய்தது தெரிந்தது.
தற்போது, விசாரணையில் முன்னேற்றம் இல்லை; சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப்:
டி.எஸ்.பி., அந்தஸ்திலான விசாரணை அதிகாரியை தஞ்சாவூர் எஸ்.பி., நியமிக்க வேண்டும். விசாரணையை எஸ்.பி., கண்காணிக்க வேண்டும். விசாரணையை, மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

