ADDED : மார் 15, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:போதைப்பொருள் பறிமுதல் மற்றும் கைது தொடர்பாக, தி.மு.க.,வை தொடர்புபடுத்தி பேச, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், 'சமீப காலத்தில் நடந்த போதைப்பொருள் பறிமுதல், கைது நடவடிக்கைகளுக்கு தி.மு.க.,வை தொடர்புபடுத்தி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியுள்ளார். இதில், தி.மு.க.,வுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது.
பொதுமக்கள் மத்தியில், தி.மு.க.,வுக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார். எனவே, தி.மு.க.,வை தொடர்புபடுத்தி பேச, பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும்; ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இம்மனு, விரைவில் விசாரணைக்கு வரும்.

