கொடூர குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.5.18 கோடி இழப்பீடு
கொடூர குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.5.18 கோடி இழப்பீடு
ADDED : டிச 27, 2025 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட கொடூர குற்றங்களால் பாதிக்கப்பட்ட, 214 பேருக்கு, 5.18 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.
கொலை, பாலியல் வன்முறை, ஆசிட் வீச்சு உள்ளிட்ட கொடூர குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு, அரசு நிதி ஒதுக்கீட்டின் கீழ், காவல் துறை சார்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது.
உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார், பாதிப்பில் இருந்து விடுபடவும், பொருளாதார ரீதியிலான பின்னடைவில் இருந்து மீண்டு வரவும் இது உதவியாக உள்ளது.
அந்த வகையில், 2024 - 2025ம் ஆண்டில், கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களில் பாதிக்கப்பட்ட 214 பேருக்கு, 5.18 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

