விர்ரென ஏறும் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்தை தொட்டது
விர்ரென ஏறும் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்தை தொட்டது
ADDED : ஏப் 03, 2024 09:54 AM

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து சவரன் ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. சமீபத்தில் 50 ஆயிரத்தை கடந்த சவரன் விலை, அடுத்த சில நாட்களில் 51 ஆயிரத்தையும் கடந்தது. இதனால் நகை வாங்க நினைக்கும் மக்கள் கலக்கமடைந்தனர்.
இந்த நிலையில் இன்று (ஏப்.,3) வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து மேலும் கலக்கமடைய செய்துள்ளது. சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6500க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.84க்கு விற்பனையாகிறது.

