நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்: நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்: நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
UPDATED : ஆக 04, 2025 08:38 PM
ADDED : ஆக 04, 2025 03:07 PM

சென்னை: நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை(ஆகஸ்ட் 5) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது;
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்த மாவட்டங்கள் பின் வருமாறு;
தேனி
தென்காசி
தருமபுரி
கிருஷ்ணகிரி
சேலம்
கள்ளக்குறிச்சி
திருவண்ணாமலை
திருப்பத்தூர்
வேலூர்
விழுப்புரம்
ராணிப்பேட்டை
*கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
* கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* தென்காசி, தேனியில் நாளை (ஆக.5) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
* திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை(ஆக.5) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளதாவது:
இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை (ஆகஸ்ட் 5) அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக
மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதிக அளவு மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மண்சரிவு, மரங்கள், மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் நாளை (05.08.2025) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒரு நாள் மட்டும் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்படும்.
மேலும், மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035- க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், வாட்ஸ் ஆப் எண் 9488700588 -க்கு தகவல் அளிக்கலாம். இவ்வாறே வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. உதகை கோட்டத்திற்கு 0423- 2445577, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262-261296, உதகை வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423- 2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423- 2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252, பந்தலூர் வட்டத்திற்கு 04262- 220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட தொலைபேசி எண்களில் பெறப்பட்ட தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும்.
இவ்வாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.