ADDED : மார் 03, 2024 02:34 AM
ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து முறைப்பாசன அடிப்படையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு 5 நாட்களுக்குப் பின் நேற்று வினாடிக்கு 2000 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டது.
கடந்த ஆண்டு பெய்த மழையால் வைகை அணை நிரம்பியது. ஜன.6ல் நீர்மட்டம் முழு அளவான 71 அடியானதை தொடர்ந்து ஆற்றின் வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு ஜன. 23ல் நிறுத்தப்பட்டது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு முறைப்பாசன அடிப்படையில் தற்போது வரை நீர் திறப்பு தொடர்கிறது. பிப்.26ல் அணையில் பாசனத்திற்கு நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 2000 கனஅடி வீதம் மீண்டும் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டது. அணை நீர்மட்டம் 68.21 அடியாகவும் நீர் வரத்து வினாடிக்கு 368 கன அடியாகவும் இருந்தது.

