ADDED : டிச 14, 2025 06:32 AM

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை, ஓரிரு இடங்களில் இரண்டு நாட்களுக்கு, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் குறைவாக இருக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரண மா க தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், நாளை மற்றும் நாளை மறுநாள், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
வரும் 17ம் தேதி, தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை, இயல்பைவிட குறைவாக காணப்படும்.
தென் மாவட்ட கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், நாளை வரை மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

