ADDED : ஜூன் 22, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல் 27ம் தேதி வரை மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி, சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 27ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

