ADDED : ஏப் 26, 2025 02:19 AM

சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சிறுவனை வெறிநாய் விரட்டி கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாதத்தில் 30க்கும் மேற்பட்டோரை இந்த நாய் கடித்துள்ளது.
நேற்று காலை 8:00 மணிக்கு சாயல்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சதாம் உசேன் மகன் முகமது சலீம் 10, என்ற ஐந்தாம் வகுப்பு மாணவரை தெரு நாய் ஒன்று விரட்டி கடித்தது. வலது கையில் ரத்த காயம் ஏற்பட்டு சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவர் அனுமதிக்கப்பட்டார்.
அப்பகுதியினர் கூறியதாவது: சாயல்குடியில் காலை மற்றும் இரவு கூட்டமாக திரியும் வெறி நாய்களால் தெருக்களில் நடமாடவே அச்சமாக உள்ளது. இரவு தனியாக செல்வோரை நாய்கள் விரட்டி கடிக்கின்றன. டூவீலர் மற்றும் சைக்கிளில் செல்வோரையும் துரத்துகின்றன. நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

